அக்கரைப்பற்று – ஆலையடிவேம்படி பகுதியில் இளைஞரொருவரை கட்டி வைத்து தாக்கிய மக்கள்!: பதற்றம்!!

0
511

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

33614562_218482962213861_6421435072020217856_nசுமார் 35 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரிடம், முஸ்லிம் இளைஞரொருவர் தகாத முறையில் நடந்து கொண்டதை அவதானித்த மக்களே அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த முஸ்லிம் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் இளைஞரை மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

33503355_218483082213849_8734604586771283968_n33401100_218483218880502_5042984422383550464_n33364733_218483165547174_6725673899385683968_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.