ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி! (படங்கள்)

0
318

 

இயக்குநர் வசந்த பாலன் – ஜி.வி. பிரகாஷ் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அபர்னதி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ராதிகவும் இப்படத்தில் நடிக்கிறார். இசை – ஜி.வி. பிரகாஷ். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற அபர்னதி அறிமுகமாகும் முதல் படம் இது.

குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், 100% காதல், 4ஜி, அடங்காதே, ஆதிக் ரவிசந்திரன் படம் என ஆறு படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

மேலும் இயக்குநர்கள் விஜய், சசி, வசந்த பாலன் ஆகியோருடன் இணைந்து படம் செய்யவுள்ளார்.

2014-ல் வசந்த பாலன் இயக்கிய காவியத் தலைவன் வெளியானது. அதன்பிறகு அவர் இயக்கும் படம் இது.

gv_vasanta666gv_vasantagv_vasanta55

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.