அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா?

0
438

 

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும்.

பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்காவில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

இதனால் அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் என்றும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

16 பேர் அணி மகிந்தவின் தலைமையை ஏற்க இணக்கம்
mahinda-300×200 அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? mahinda

மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று மாலை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கூட்டு எதிரணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இணைந்து செயற்படுவோம்.

இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்த போது, மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். இரண்டு பேருமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தான்” என்றும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.