நிர்வாண மொடலான தமிழ் பெண்!!- (வீடியோ)

0
1352

சென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது.

இந்த கதை தனலட்சுமி மணி முதலியார் என்ற தமிழ் பெண்ணை கதை நாயகியாக கொண்டு நகர்கிறது. இவர் மும்பையில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் ஆவார்.

பிறந்ததில் இருந்து வறுமை, கவலை, துன்பத்தை மட்டுமே கண்ட தனலட்சுமி வாழ்வில் நடந்த ஒரு பெரும் திருப்பம் தான் இந்த திரைப்படத்தின் கதை. ஓர் பெரும் கதறலுடன் துவங்கிய அந்த திருப்பம்… இன்று தனலட்சுமியை பல கலைஞர்கள் காலை தொட்டு வணங்கும் அளவிற்கு உயர்ந்த மனிதியாக காண வைத்திருக்கிறது.

தனலட்சுமியின் பெற்றோர் படிக்காதவர்கள். மும்பையில் அவர்கள் பார்த்து வந்த வேலை குப்பை அள்ளுவது. வறுமை வாட்டி எடுக்கும் போதும், குப்பை அள்ள முடியாத நாட்களிலும் தனலட்சுமி மற்றும் அவருடன் பிறந்தவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலையும் இருந்துள்ளது.

இவர்கள் போகுமிடமெல்லாம் வறுமை பின்தொடர்ந்து கொண்டே வர, தனலட்சுமி மற்றும் அவரது சகோதர, சகோதரிகளால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாரவிக்கு இடம் பெயர்ந்தது இவரது குடும்பம்.

வீட்டு வேலைக்கு செல்வது, சாப்பாடு, மீன் வறுவல் சமைத்து மும்பையின் நிஷா தியேட்டர் வாசலில் விற்பது என வேலை செய்ய துவங்கினார் தனலட்சுமி. சிறு வயதில் இருந்தே தனலட்சுமிக்கு சினிமா என்றால் மிகவும் பிரியம்.

இவர், தான் முதலில் பார்த்த திரைப்படம் ஷோலே என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தந்தையின் குடிப்பழக்கம், அதனால் அம்மாவை போட்டு அடிப்பது… தனலட்சுமி வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்த அம்மா அழுது தீர்ப்பது போன்றவற்றால் வீட்டு வேலை செய்யும் இடங்களில் இருந்து தனலட்சுமி நிறுத்தப்பட்டார்.

இதன் பிறகு இறால் விற்கும் வேலையை செய்து வந்துள்ளார் தனலட்சுமி.

_101643369_1db55e75-8475-4846-b8bf-2a3825d2ad6fதிருமணம்!

தனது அம்மாவுக்கு தெரிந்த ஒரு நபருடன் தனலட்சுமிக்கு திருமணம் ஆனது. வெறும் 14 வயதில் தன்னை விட 10 வயது மூத்த நபருடன் திருமணம் நடந்தது என்று கூறியுள்ளார் தனலட்சுமி. இதன் பிறகு தனலட்சுமி வாழ்வில் நடந்தவை எல்லாம் பெரும் சோகங்கள்.

எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து இவரது சகோதரர்கள் மரணம் அடைந்தனர். மற்றொருபுறம் தான் பெற்ற குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு இவரது சகோதரி எங்கோ சென்றுவிட்டார். அக்காவின் குழந்தைகளை வளர்க்கும் கடமையும் தனலட்சுமியை வந்து சேர்ந்தது. இதனால் கணவனுடன் வீண் தகராறு மற்றும் சண்டைகள் எழுந்தன.

நிர்வாண வேலை!

அந்த சமயத்தில் தான் ஜெ ஜெ கலை கல்லூரியில் வேலை செய்து வந்த ராஜம்மா எனும் பெண்ணுடன் தனலட்சுமிக்கு தொடர்பு உண்டாகிறது. அதே கல்லூரியில் தனக்கும் வேலை வாங்கி தர கோரி உதவி நாடுகிறார் தனலட்சுமி.

தானே அந்த கல்லூரியில் கூட்டி பெருக்கும் வேலை தான் செய்து வருகிறேன் என்று கூறி சென்றார் ராஜம்மா. ராஜம்மா சரியான பதில் கூறவில்லை என்றால் என்ன.. தானே நேராக சென்று வேலை கேட்கலாம் என்று தனலட்சுமி ஜெஜெ கல்லூரிக்கு செல்கிறார்.

அங்கே ராஜம்மாவை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தண்ணீர் குடிக்க ஒரு வகுப்பறை முன் சென்று பார்த்த போது தான் தனலட்சுமிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ராஜம்மா அங்கே நிர்வாணமாக நின்றுக் கொண்டிருந்தார்.

தனலட்சுமி தன்னை அந்த நிலையில் கண்டதை பார்த்த ராஜம்மாவிற்கு பெரும் கோபம். நான் தான் உன்னை இங்கே வரவேண்டாம் என்று கூறினேன் தானே. ஏன் இங்கே வந்தாய் என்று திட்டுகிறார்.

ஆசிரியர்!
தனலட்சுமிக்கு ராஜம்மாவை கண்ட அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை. பசி பட்டியினில் வாடுவதற்கு இந்த வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தனலட்சுமியிடம் கூறுகிறார் ராஜம்மா.

தனலட்சுமி, ராஜம்மா பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கே ஒரு ஆசிரியர் வருகிறார். தனலட்சுமியிடம்… நீங்கும் இங்கே இந்த வேலை செய்ய சம்மதமா என்று கேட்கிறார்? தனலட்சுமிக்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லை.

எப்படி பலர் முன்னிலையில் நிர்வாணமாக நின்று வேலை பார்ப்பது என்ற கூச்சம். அந்த ஆசிரியர் கேள்வி கேட்ட போது, தனலட்சுமியிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் ராஜம்மா… இவரும் இந்த வேலை செய்வார் என்று பதில் கூறிவிடுகிறார்.

60 ரூபாய்!

யோசனையை தள்ளி வை, முதலில் இந்த வேலையை செய். நிர்வாணமாக போஸ் கொடுத்தால் அறுபது ரூபாய். ஆடையுடன் போஸ் கொடுத்தால் ஐம்பது ரூபாய்.

உன் உடம்பு நல்லா தான் இருக்கு. உனக்கு இங்கே நிறையா பணம் கிடைக்கும் என்று தனலட்சுமியிடம் கூறுகிறார் ராஜம்மா. ராஜம்மாவை நிர்வாணமாக கண்ட அதிர்ச்சி விலகாத அந்நாளில் இருந்தே தானும் அங்கே வேலை செய்ய துவங்கினார் தனலட்சுமி.

_101645177_c1a798bb-dd21-4089-a65f-b698006a5d7c

முதன்முதலில் நிர்வாணமான அனுபவம்

முதலில் தயக்கமாக இருந்தது. அழத் தொடங்கி விட்டேன்.

அப்போது, என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும். என் மார்பகங்கள் பெரிதாக இருந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், மாணவர்கள் என்னை சமாதானப்படுத்தினர்.

தயக்கம், அழுகை.. மனம் முழுதும் ரணமாகி போனது. மற்றவர் முன் ஆடையின்றி நிர்வாணமாக நிற்பது குறித்த பெரும் கவலை. அப்போது தான் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்திருந்தார் தனலட்சுமி.

ஆகையால் அவரது மார்பகங்களில் பால் வடிந்துக் கொண்டிருந்தன. மாணவர்கள் படம் வரையும் போது இப்படியான சங்கோஜத்தை உணர்ந்த தனலட்சுமியின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அவரது மனநிலையை புரிந்துக் கொண்ட மாணவர்கள் அவரை வீட்டுக்கு சென்று, நாளை வருமாறு அழைத்தனர்.

_101645178_aedfffe8-63c1-40b9-b8d9-a66d8c5b618c25 ஆண்டு கால பயணம்

ஆரம்பக் காலத்தில் ராஜம்மாவுக்கு தான் ஜெ.ஜெ கலை கல்லூரியில் மதிப்பு அதிகமாக காணப்பட்டது. பிறகு தனலட்சுமி மாணவர்களுடன் நன்கு பழக ஆரம்பித்தார். அவர்களது வேலை குறித்த புரிதலும் தனலட்சுமியிடம் தென்பட்டது. அறுபது ரூபாயில் துவங்கி இப்போது ஓவியம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார் தனலட்சுமி.

நிர்வாணமாக இன்றி தோன்ற வேண்டும் என்றால் நானூறு ரூபாய் தான். சம்பளம் போக அங்கே இருக்கும் கலைஞர்கள் பலரும் தனலட்சுமிக்கு உதவி வருகிறார்கள்.

இந்த 25 ஆண்டு கால பயணத்தில் ஒரு மாணவர் கூட தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. அவர்களது பார்வையில் கூட எந்த ஒரு தவறும் இருக்காது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் தனலட்சுமி.

நன்கு படிக்க வைக்க முயற்சித்தேன்…

என் பெற்றோர் படிக்காதவர்கள், எங்கள் ஏழ்மை காரணமாக எனது படிப்பும் மிக சிறிய வயதிலியே தடைப்பட்டு போனது. என் பிள்ளைகளையாவது நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால், நான் சம்பாதித்த பணம் அவர்களுக்கான சிறந்த கல்வியை ஏற்படுத்திக் கொடுக்க போதுமானதாக இல்லை.

என் வாழ்க்கை நியூட் என்ற பெயரில் மராத்தி மொழியில் படமாக வந்தது. இந்த படத்திற்காக தான் ஒரு புடவை மற்றும் இருபதாயிரம் ரூபாய் மனம் மட்டுமே பெற்றதாகவும். அதுவும் தனது கடன்களை அடைக்க சரியாக போனது என்றும் கூறியுள்ளார் தனலட்சுமி.

‘என்னை நினைத்து பெருமைப்படும் என் பிள்ளைகள்’

நான் ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி வந்தேன் என்று என் பிள்ளைகளிடம் கூறியதில்லை. பேராசிரியர்களுக்கு டீ போட்டு கொடுக்கும் பணியும், துப்புரவு பணியும் செய்து வருவதாகத்தான் அவர்களிடம் கூறிவந்தேன்.

ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்குமுன், படத்தின் கதை என்னுடைய வாழ்க்கையை பற்றியதுதான் என்பதை தெரிவித்தேன். முதலில், நான் நகைச்சுவைக்காக கூறுவதாக என் பிள்ளைகள் நினைத்தார்கள். பிறகு என் மீது எரிச்சலைடைந்தார்கள். ஆனால், நல்லபடியாக என்னுடைய சூழலை நான் அவர்களுக்கு புரிய வைத்துவிட்டேன்.

இந்த திரைப்படம் குறித்து ஜெ. ஜெ கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது. அதற்குகூட என்னுடைய குடும்பத்தை நான் அழைக்கவில்லை.

நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்தான் என் குடும்பத்தினர் பார்த்தனர். தங்களது தாய் கெளரவிக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள். என்னைப்பற்றி பெருமைப்பட்டார்கள்.

பல ஆண்டுகளாக ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி நிறைய பணம் சம்பாதித்த பிறகும், எனக்கென்று ஒரு சொந்த வீடு கூட இல்லை. நான் குர்லா பகுதியில் என்னுடைய மகன்களோடு வசித்து வருகிறேன்.

என்னால் என்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியவில்லை. என்னுடைய மகன்கள் சவாலான பணிகளையே செய்து வருகின்றனர். எப்போதும் பணத்தேவை என்பது இருந்துகொண்டே இருக்கிறது.

தற்போது, ஓவிய பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெண்கள் கழிப்பறை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். இந்த வேலைக்கு, நாள் ஒன்றுக்கு 200 ரூபாயாக வருமானம் கிடைக்கிறது.

நான் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். நான் ஒரு விதவை. எனக்கு விதவைகளுக்கு தரப்படும் உதவித்தொகையும் கிடையாது. எங்களுக்கென்று எந்தவொரு அரசாங்க திட்டங்களுமில்லை. என்னுடைய உடல் தோற்றத்துடன் இருக்கும்வரை இந்த தொழிலில் இருக்கலாம். அதன்பிறகு நான் என்ன செய்வேன்? இந்த ஒரு கேள்வியே என்னை நிலைகுலைய வைக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.