யாழ் கரவெட்டி கரணவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியான பரிதாபம்!! (படங்கள்)

0
424

யாழ்ப்பாணம் – கரவெட்டி, கரணவாய் கிழக்கில் இன்று காலை வேளையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

கேபிள் ரீவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

14865-2-f84e7a03152d78505cda6985600980b714865-1-f84e7a03152d78505cda6985600980b714865-3-f84e7a03152d78505cda6985600980b714865-4-f84e7a03152d78505cda6985600980b714865-5-f84e7a03152d78505cda6985600980b714865-6-b8c23b4c95da24d873048d526d3e27ca

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.