முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை – தற்கொலை செய்தது உறுதியானது

0
590

ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் பெர் லினில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு தப்பி சென்றார். அண்டார்டிகா அல்லது வேறு பகுதிக்கு சென்று தலைமறை வாகிவிட்டார் என்ற சர்ச்சையும் உள்ளது.

அவரது மரணம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் சார்லியர் மற்றும் 4 நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்த பல் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில்இ இடதுபுறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளம் உள்ளது.

எனவே ஹிட்லர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி பெர்லினில்தான் மரணம் அடைந்துள்ளார் என உறுதியாக கூறியுள்ளனர்.

மேலும் அவர் சைவப்பிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.