சந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி

0
272

சென்னை: மகனை நினைத்து பெருமைப்பட்டுள்ளார் அரவிந்த்சாமி. நடிகர் அரவிந்த்சாமிக்கு முதல் மனைவி மூலம் ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 18 வயதான ருத்ரா ஐபி டிப்ளமோ படித்து முடித்துள்ளார்.

இதை அரவிந்த்சாமி ட்விட்டரில் பெருமையாக தெரிவித்துள்ளார்.

ஐபி டிப்ளமோ முடித்த மகனை மட்டும் அல்ல அவருடன் படித்த அனைவரையும் வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் அரவிந்த்சாமி. உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக இரு. கனவுகள் பெரிதாக இருக்கட்டும் என்று அறிவுரையும் வழங்கியுள்ளார் அவர்.

aravinthe

அரவிந்த்சாமி தனது பிள்ளைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் ஆள் இல்லை. இந்நிலையில் மகனின் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக மகள் ஆதிரா தனக்காக பாசத்துடன் செய்த கேக்கை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் அரவிந்த்சாமி.
மீடியா வெளிச்சத்தில் இருந்து தனது பிள்ளைகளை தள்ளியே வைத்திருக்கும் அரவிந்த் சாமி தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.

கடந்த 17ம் தேதி ரிலீஸான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை பார்த்தவர்கள் இது ரீமேக் போன்றே இல்லை. அரவிந்த்சாமியின் நடிப்பு அருமை என்று பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.