தெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது – வைரல் வீடியோ!

0
506

பெயர் வெளியிடப்படாத அந்த பெண் ஒரு பெண்ணுரிமை போராளி / ஆர்வலர் ஆவார். இந்த பெண்ணின் போராட்டத்திற்கு பெண்ணியவாதிகள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனகள் எழுந்துள்ளன.

சிலர் இவரது போராட்டத்திற்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். வாட்டிகன் நகரின் செயிண்ட் பீட்டர் ஸ்கொயர் பகுதியில் தான் இந்த பெண் போராளி மேலாடை இன்றி தனது குழந்தைக்கு பாலூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அனைவரும் எதிர்பார்த்த வகையில் மிக விரைவாக விரைந்து வந்த காவலர்கள் இந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் போது, அந்த பெண் ஆர்வலர் தனது மார்பகம் மற்றும் முதுகில் Alma Mater என்ற வாசகத்தை கருப்பு மை கொண்டு எழுதி இருந்தார்.

இதற்கு இலத்தின் மொழியில் தாய் பாலூட்டுதல் என்ற பொருள் என்று கூறப்படுகிறது. ஃபெமன் என்ற பெயரில் இவர்கள் இயக்கம் நடத்தி வருகிறார்கள். இதில் பல பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

2-1526643070

அதில் ஒரு பெண்ணுரிமை ஆர்வலர்,’ இந்த பெண் ஆர்வலரின் நோக்கமானது, தாய்மார்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தங்கள் குழந்தைக்கு தாய் பாலூட்டலாம் என்பதை போப் பிரான்சிஸ் கவனத்திற்கு எடுத்து செல்வதே ஆகும்” என்று கூறுகிரார்கள்.

இந்த இயக்கத்தின் மூலம் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் உட்பட பலரும் இந்த போராளியின் போராட்டம் குறித்து பல கருத்துக்கள், விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் இதில் ஒருசிலர் இது வரவேற்கத்தக்கது என்றும், ஒரு சிலர் இப்படியான போராட்டம் அவசியமற்றது.

மேலும், இந்த போராட்டத்தில் குழந்தையை உட்படுத்தியது சரியானதாக இல்லை என்றும் குறிப்பிட்டு தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

வாட்டிகன் நகரின் செயிண்ட் பீட்டர் சதுரத்தில் மேலாடை இன்றி தாய் பாலூட்டி போராட்டம் நடத்தி காவலர்களால் பெண் போராளி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் காணொளிப்பதிவு. இந்த வீடியோ பதிவு மேற்கத்திய நாடுகளில் சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.