திருப்பதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வழிபாடு செய்த போது திடீர் என சாமியாடிய நபர் வீடியோ

0
292

முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீர் என சாமியாடிதால் பரபரப்பு ஏற்பட்டது.

உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய அவர் , எடப்பாடிய வந்து என்னை பாக்க சொல்லு, தமிழ்நாடு சீரழந்து போய் கிடக்கு அவன் ஒரு மாயயில் இருக்கிறான் அவனுக்கு ஒன்னும் தெரியாது என அவன் இவன் வாடா போடா என கத்தினார்.

இதை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் திகைத்தனர். பின்னர் போலிசார் அவரை குண்டுகட்டாக அப்புறப்படுத்தி விசாரனை நடத்தினர்.

விசாரனையில் முதலமைச்சருக்கு எதிராக பேசிய அவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஸ்ரீராமலு என்பது தெரியவந்தது.

முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களது முன்னிலையிலேயே ஒரு நபர் ஆட்சி சரியில்லை என்ற கருத்தில் சாமியாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தெளிந்த பின்னர் ஸ்ரீராமலு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.