கர்நாடக தேர்தல் இறுதி முடிவுகள் – கட்சிகளின் வெற்றி, வாக்கு சதவீதம் விபரம்

0
141
பெங்களூரு:கர்நாடக மாநில சட்டசபையில் உள்ள 224 இடங்களில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி  வருகின்றன.

மாலை 7 மணி நிலவரப்படி, பா.ஜ.க. வேட்பாளர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 74 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதவிர, பா.ஜ.க. வேட்பாளர்கள் 7 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.

இன்னும் 10 தொகுதிகளுக்கான முடிவுகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வேண்டியுள்ள நிலையில், இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் (மாலை 7 மணி நிலவரப்படி) காங்கிரஸ் கட்சி 38 சதவீதம் வாக்குகளையும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. 36.2 சதவீதம் வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.4 சதவீதம் வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் 4 சதவீதம் வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 0.3 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இன்னும் 10 தொகுதி முடிவுகள் வெளியான பின்னர் இந்த வாக்கு சதவீதத்தில் சில புள்ளிகள் மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயநகர் தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்ததாலும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அடையாள் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாலும் இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection2018

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.