வடகொரியாவின் அணு குண்டு ஹிரோஷிமாவை தாக்கியதை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது

0
602

 

கடந்த ஆண்டு வட கொரியா நடத்திய அணு குண்டு சோதனை காரணமாக, 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் அருகில் இருந்த மௌண்ட் மன்டாப் என்ற மலை வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளது.

வடகொரியா கடந்த ஆண்டு நடத்திய மிகப்பெரிய, நவீன அணு குண்டு சோதனையின் மூலம், ஒரு மலையே வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளது.

இந்த அணு குண்டு, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1526305925-4987சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் டெக்னாலஜிகல் பல்லைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

வட கொரியாவின் மௌண்ட் மன்டாப் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பூமிக்கு அடியில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.2 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் குண்டு வெடிப்பின் தாக்கத்தால் சுமார் 8.5 நிமிடங்களுக்கு நிலத்தில் அதிர்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், புவியியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை கண்காணித்த போது, மௌண்ட் மன்டான் 3.5 மீட்டர் அளவுக்கு நகர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல துறைகளில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், வடகொரியா நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட அணு குண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணு குண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என்பதே.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.