கணவர் செய்த செயல்: 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் கீழே போட்ட தாய்! வீடியோ!!

0
312

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு சென்ற பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது குழந்தை தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் உள்ள மால் ஒன்றிற்கு பெண் ஒருவர் கணவருடன் தன் பத்து மாதக் குழந்தை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, மூன்றாவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் எஸ்கலேட்டர் இயக்கத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு செல்ஃபி எடுக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது.

அப்போது, அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்தப் பெண் கையிலிருந்த 10 மாதக் கைக்குழந்தை எஸ்கலேட்டருக்கும் நடைபாதைக் கைபிடிக்கும் இடையே மோதிக் கீழ் தளத்தில் விழுந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

அங்கு தரையில் மோதிய உடனேயே அந்தக் குழந்தையின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.செல்பி மோகத்தால் அநியாயமாக பச்சை குழந்தை பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.