கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி – ம.ஜ.த.வுக்கு முதல்வர், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி?

0
210

 

கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக முக்கிய வியூகம் வகுத்து வருகிறது.

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 42-ல் வெற்றியும், 35-ல் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 18-ல் வெற்றியும் 20-ல் முன்னிலையில் உள்ளது.

இதனால், காங்கிரஸ் – மஜத இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை மஜதவுக்கும், துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 மந்திரி பதவி காங்கிரசுக்கும், 16 மஜத கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக மஜத மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் பாஜக தலைவர் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கிய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர், மந்திரிகள் ரவிஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜே.பி. நட்டா உடனடியாக பெங்களூர் புறப்பட்டுள்ளனர். #KarnatakaVerdict

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.