துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்

0
480

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளார் என்பதுடன், விபத்துடன் தொடர்புடைய காதலனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.பீ.அன்பார்,  இன்று (12) உத்தரவிட்டார்.

வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா (17 வயது) என்ற இளம் யுவதியே, சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைதீவு, அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

accident-a

குறித்த இளைஞனும் யுவதியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டாருக்குத் தெரியாமல் இளைஞனின் வீட்டுக்கு யுவதி வந்துள்ளார்.

எனினும், முல்லைதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து யுவதி வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இளைஞனைப் பிரித்து, சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, மேற்படி யுவதி, காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காதலனான பிரபாகரன், சம்பூர் பகுதிக்குச் சென்று, மோட்டார் சைக்கிளில் காதலியை ஏற்றி வந்த வேளை, யுவதியின் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த காதலர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காதலி உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.