ஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார்? – ரொபட் அன்­டனி (கட்டுரை)

0
451

ஜனா­தி­பதித்தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடக்­குமா? அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா? போன்ற கேள்­வி­க­ளுக்கு இது­வரை சரி­யான பதில்கள் கிடைக்காமல் இருக்­கின்ற சூழலில் அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலில் என்ன நடக்­கப்­போகின்­றது என்­பது குறித்து தற்­போது அனைத்துத் தரப்­பி­னரும் சிந்­திக்க ஆரம்­பித்து விட்­டனர்.

அதா­வது அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலை இலக்­கு­வைத்து தற்­போது அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை அர­சி­யல் ­கட்­சிகள் ஆரம்­பித்து விட்­டதை காண முடி­கின்­றது.

ஜனா­தி­பதித்தேர்தல் நிச்­ச­ய­மாக நடக்கும் என்ற நம்­பிக்­கையில் ஒரு சாரார் அடுத்த கட்ட அர­சியல் நட­வ­டிக்கை தொடர்பில் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அதே­போன்று அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றாது என்றும் அதற்கு முன்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­படும் என்று மற்­றொரு சாராரும் கூறி­வ­ரு­கின்ற நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான சூழலில் அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் குறித்த பர­ப­ரப்­பான அர­சியல் காய்நகர்த்­தல்கள் தற்­போதே ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

இவ்­வாறு வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கு­வது வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்­கான சூழலை எவ்வாறு உரு­வாக்­கு­வது, வெற்­றி­பெ­றக்­கூ­டிய வேட்­பா­ளரை எவ்­வாறு கண்­டு­பி­டிப்­பது போன்ற பல்­வேறு மட்ட அர­சியல் அணு­கு­மு­றைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­பதை காண்கின்றோம்.

இந்த சூழலில் 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­மாயின் அதில் எவ்வா­றான நிலைமை ஏற்­படும்.

பிர­தான கட்­சிகள் சார்பில் தேர்­தலில் போட்டியிடப்போகும் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் யார்? கட்­சி­களின் ஜனா­தி­பதி வேட்பாளர்கள் குறித்த தெரிவு எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றது போன்ற விட­யங்கள் குறித்து நாம் ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

முதலில் தற்­போ­தைய அர­சியல் சூழலை நாம் ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக அகற்றுவதாக கூறியே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரத்­திற்கு வந்தார்.

அவர் முதற்­கட்­ட­மாக 19 ஆவது திருத்த சட்­டத்தைக் கொண்­டு­வந்து நிறை­வேற்று அதிகாரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் சில அதி­கா­ரங்­களை நீக்­கினார்.

அடுத்து அவர் இந்த முறைமை முற்­றாக ஒழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பாரா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஸ்தம்­பி­த­ நி­லையை அடைந்­தி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில் புதிய அரசி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு அதில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்டால் 2020இல் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றாது.

ஆனால் தற்­போது ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருக்­கின்ற வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உருவாக்கும் செயற்­பா­டுகள் மீள் ஆரம்­பிக்­கப்­ப­டா­விடின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீடிக்கும் என்­ப­துடன் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெறும்.

அதே­போன்று எதிர்­வரும் 8ஆம் திகதி மக்கள் விடு­தலை முன்­னணி நிறை­வேற்று அதிகாரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரேரணையைக் கொண்­டு­வ­ரு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது.

அந்த தனி­நபர் பிரே­ர­ணைக்கு அனைத்­துக்­கட்­சி­களும் ஆத­ர­வ­ளித்து அந்த சட்­ட­மூலம் சட்­ட­மாக்­கப்­ப­டு­மானால் அப்­போதும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடைபெறாது.

ஆனால் மக்கள் விடு­த­லை முன்னணியின் அந்த தனி­நபர் பிரே­ரணை முயற்சி தோல்வி­ய­டை­யு­மானால் 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெறும்.

இந்­நி­லையில் தற்­போது அர­சியல் கள­நி­லை­மை­களைப் பார்க்­கும்­போது 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யமே அதிகம் காணப்படுவதாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

அதன்­படி 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­மானால் அடுத்து என்ன நடக்கும் என்­பதை ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அதா­வது கட்­சி­களின் சார்பில் தனி­வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­டு­வார்­களா? அல்­லது பொது­வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­டு­வார்­களா என்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் நாட்டில் பொது வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­பட்டதால் பொது வேட்­பாளர் என்ற சொற்­பி­ர­யோ­க­மா­னது தற்­போ­தைய நிலையில் இலங்கை அர­சி­யலில் பிர­ப­ல­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் அடுத்­து­வரும் தேர்­தல்­களில் அது சாத்­தி­யமா என்­பது ஆரா­யப்­ப­ட ­வேண்­டிய விடயம். தற்­போ­தைய கூட்­டு அ­ர­சாங்­கத்தின் மிகப் பிர­தான கட்­சி­யாக காணப்­படும் ஐக்கிய தேசி­யக்­கட்சி எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை கள­மி­றக்­கப்­போ­கின்­றது என்­பது மக்கள் மத்­தியில் ஓர் ஆர்­வ­மான விட­ய­மாக மாறி­யி­ருக்­கின்­றது.

அதா­வது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் கூறிவ­ரு­கின்­றனர்.

மறு­புறம் சஜித் பிரே­ம­தா­ஸ­வையே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­ வேண்­டு­மென மறை­முக கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால் தற்­போ­தைய நிலை­மையை நோக்கும்போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே போட்­டி­யி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ranil_15அவ்­வாறு அவர் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ராக இருந்தால் என்ன நடக்கும் என்­பதே பல­ரது கேள்­வி­யாக இருக்­கின்­றது.

அதா­வது ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யிட்டால் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை இல­கு­வாக பெறலாம் என்றும் எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றிபெறுவதற்கான சாத்­தியம் இருப்­ப­தா­கவும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சில முக்கி­யஸ்­தர்கள் கூறி­வ­ரு­கின்­றனர்.

sajithஆனால் சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கினால் கிரா­மிய மட்­டத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அதிக வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­பெ­றலாம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் இது­வரை ஐக்­கிய தேசி­யக்­கட்சி மட்­டத்தில் இறு­தி­யான முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை.

எனினும் இம்­முறை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் நேரடி வேட்­பாளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­ வேண்டும் என்றும் இறக்­கு­மதி செய்­யப்­ப­டுப­வர்­களை வேட்­பா­ளர்­க­ளாக அனு­ம­திக்க முடி­யாது என்றும் கட்­சி­யினர் கூறி வரு­கின்­றனர்.

எனவே ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது இம்­முறை நேர­டி­யாக வேட்­பா­ளரை கள­மி­றக்கும் என்­பது தெளி­வா­கி­றது.

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க களமிறக்கப்படலாம் என்­பதும் கிட்­டத்­தட்ட உறு­தி­யாகி வரு­கி­றது. ஆனால் கட்­சிக்குள் மாற்­றுக்­க­ருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன என்­ப­த­னையும் இங்கு குறிப்­பிட்­டா­க ­வேண்டும்.

இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது பலரின் கேள்­வி­யாக இருக்­கி­றது. குறிப்­பாக தற்­போது மொட்டு சின்­னத்தில் போட்டியிட்டு உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பு வெற்றியீட்டியுள்­ளதால் அந்த தரப்பின் சார்பில் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டலாம்.

அல்­லது மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்­பினர் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­ன­ருடன் இணைந்து சுதந்திரக்கட்­சியின் சார்பில் ஒருவர் கள­மி­றக்­கப்­ப­டலாம்.

இந்த தரப்பில் இப்­போது எவ்­வாறு வேட்­பாளர் கள­மி­றக்­கப்­ப­டலாம் என்­பதே அர­சியல் புதி­ராக இருக்­கி­றது.

maithri-1 தற்­போ­தைய சூழலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் மைத்­திரி தரப்பில் இருக்கின்றவர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அடுத்த ஜனா­தி­பதி தேர்தலில் சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்­பாக கள­மி­றக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு இன்னும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பச்­சைக்­கொடி காட்டவில்லை.

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்கும்போது தான் அடுத்­த­முறை தேர்­தலில் போட்­டி­யிடமாட்டேன் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா என்­பது நிச்­ச­ய­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஒரு­வேளை மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்­பினர் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்க தீர்மானித்தால் அதற்கு ஜனா­தி­பதி சில­நேரம் இணக்கம் தெரி­விக்­கலாம். ஆனால் அவ்­வா­றான ஒரு கூட்டு சாத்­தி­ய­மா­குமா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாகும்.

இதே­வேளை தாமரை மொட்டு சின்­னத்தில் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன என்ற பெயரில் கூட்டு எதி­ர­ணி­யினர் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தனி­வேட்­பா­ளரை கள­மி­றக்கும் எண்­ணத்தில் இருப்­ப­தா­கவே தெரி­வித்து வரு­கின்­றனர்.

அதா­வது கூட்டு எதி­ர­ணியின் சார்பில் அனைத்துத் தரப்­பி­ன­ரதும் ஆத­ரவைப் பெறக்­கூ­டிய ஒரு­வரை கள­மி­றக்­கப்­போ­வ­தாக அந்த அணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடிக்­கடி கூறிவ­ரு­கின்­றனர்.

தற்­போ­தைய நிலை­மையில் கூட்டு எதி­ர­ணியின் சார்பில் ஒரு­சி­லரின் பெயர்கள் அரசியல் களத்தில் அடி­பட்டு வரு­கின்­றன.

அதா­வது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ, முன்னாள் பொருளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ்ஷ ஆகி­யோரின் பெயர்­களே தற்போது ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன தரப்பில் பேசப்­ப­டு­கின்ற பிர­ப­ல­மான பெயர்களாக உள்ளன.

a21f85f7-04da-45c2-9c57-d74b1a82aaa41கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் பஷில் ராஜ­பக் ்ஷ ஆகியோர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­த­ரர்கள்.

கோத்­த­பாய ராஜ­பக் ்ஷவை பொறுத்­த­வ­ரையில் யுத்­தத்தை முடிப்­பதில் பெரும் பங்­காற்­றி­ய­வ­ரா­கவும் கொழும்பு நகரை அபி­வி­ருத்தி செய்­ததில் குறிப்­பி­டத்­தக்க நற்­பெ­யரை பெற்­ற­வ­ரா­கவும் இருக்­கின்றார்.

குறிப்­பாக யுத்­த­கா­லத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ பெரும் பங்­காற்­றி­ய­வ­ராக இருக்­கின்றார்.

அவரின் பெய­ரா­னது கூட்டு எதி­ர­ணியின் சார்பில் ஆரம்­பத்திலிருந்தே பேசப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வரு­வதில் தற்­போ­தைய நிலை­மையில் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற ஒரு­பெ­ய­ராக இருக்­கின்­றது.

அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சில சிக்­கல்­களும் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ தற்­போ­தைய நிலை­மையில் அமெ­ரிக்க பிர­ஜை­யாக இருக்­கின்றார். எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மாயின் அமெரிக்க குடி­யு­ரி­மையை ரத்து செய்­ய­வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டால் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற முடி­யுமா என்ற அச்­சமும் மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்­பிற்கு இருக்­கி­றது.

எவ்­வா­றெ­னினும் கோத்­த­பாய ராஜ­பக் ்ஷவை கள­மி­றக்கும் கூட்டு எதி­ர­ணியின் முயற்சி தொடர்ந்து இருந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றது.

2அதே­போன்று பஷில் ராஜ­பக் ஷவின் பெயரும் கூட்டு எதி­ர­ணியின் சார்பில் அவ்­வப்­போது முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

பஷில் ராஜ­பக் ்ஷவை பொறுத்­த­வ­ரையில் அவர் கடந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஈட்­டிய வெற்­றிக்கு முக்­கிய கார­ண ­கர்த்­தா­வாக இருந்­த­தாக நம்­பப்­ப­டு­கின்­றது.

நாடு முழு­வதும் பாரிய ஒரு கட்­ட­மைப்பை அவர் கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது.

கடந்த 3 வரு­டங்­க­ளாக அவ­ரது பெயர் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் கடந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலின் வெற்­றியின் பின்­னரே அவ­ரது பெயர் வெளி­வர ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ரானால் சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­க­ளைப்­பெ­று­வதில் சிக்­கல்கள் இருக்­காது என மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்பு நம்­பு­கின்­றது.

ஆனாலும் பஷில் ராஜ­பக் ்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன.

குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜ­பக் ்ஷ தோல்வி அடைந்ததும் மறுதினமே தனது மனைவியுடன் பஷில் ராஜ­பக் ்ஷ அமெரிக்கா பறந்தார்.

சகோதரர் தோற்றவுடன் அவரை தனிமையில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றதாக பஷில் ராஜ­பக் ்ஷ மீது பலத்த அதிருப்திகள் ஏற்பட்டன.

அது அவருக்கொரு தடங்கலை ஏற்படுத்தலாம். கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியுடன் அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும்கூட அந்த விடயம் இன்னும் அரசியல்வாதிகளினால் பேசப்பட்டே வருகின்றது.

அதேபோன்று அவர் மீது பல வழக்குகளும் உள்ளன. அவற்றை தாண்டி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது சவாலாகவே இருக்கும்.

எனினும் அவர் அண்மையில் முகத்துவாரம் விஷ்ணுகோவிலுக்கு சென்ற நிகழ்வானது அரசியல் ரீதியில் ஏதோ ஒரு செய்தியை கூறுவதாகவே இருந்தது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் இன்னும் ஒன்றரை வருடங்களில் நடைபெற வேண்டும். அடுத்த வருடம் ஆரம்பம் முதல் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகிவிடும்.

கட்சிகள் அதற்கு தயாராகிவிடும். அதன்போது யார் கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது கூறப்பட்டே ஆகவேண்டும். எனவே தற்போதைய அரசியல் களத்தில் பலரது பெயர்கள் இருக்கின்றன.

யார் வேட்பாளர்களாக வரப்போகின்றார் என்பதை இந்த வருடம் முடிவில் தெரிந்துகொள்ளலாம். எப்படியிருப்பினும் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அது மிகப்பெரியதொரு போட்டிக்களமாகவே இருக்கும். என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-ரொபட் அன்­டனி-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.