இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே

0
779

மும்பை: நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயத்தை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே என்பதே பலரின் வருத்தமாக உள்ளது.

ஸ்ரீதேவியின் மைத்துனர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் திருமணம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீதேவி இறந்த பிறகு கபூர் குடும்பத்தில் நடந்துள்ள முதல் திருமணம் இது. திருமணத்தை அடுத்து நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தனது கணவர் போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் அர்ஜுன் கபூரின் வெறுப்பை நினைத்து ஸ்ரீதேவி எப்பொழுதுமே கவலைப்பட்டது உண்டு.

இந்த கவலை குறித்து அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பல முறை தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவியை வெறுத்தார். இதனால் தனது தந்தையுடன் பேசாமல் இருந்தார்.

arjun2-1525860606ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு தந்தையுடன் பேசிவிட்டார் அர்ஜுன். மேலும் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷியை தனது சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார்.

நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அர்ஜுன் கபூர் தனது சொந்த தங்கை அன்ஷுலா மற்றும் ஜான்வி, குஷி ஆகியோருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதை பார்த்தவர்கள் எல்லாம் இந்த காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டார். அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்று வருத்தப்பட்டனர்.

salman1-1525860625வரவேற்பு நிகழ்ச்சியில் ஜாலியாக இருந்த அர்ஜுன் கபூர் சல்மான் கான் வந்ததும் பதுங்க ஆரம்பித்துவிட்டார். சல்மான் அர்ஜுனை பார்த்தும் பார்க்காதது போன்றே இருந்துவிட்டார்.

சல்மான் கான் ஒரு காலத்தில் அர்ஜுனுக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆனால் அர்ஜுன் சல்மான் கானின் தம்பி அர்பாஸின் முன்னாள் மனைவி மலாய்க்காவுடன் தொடர்பு கொண்டதால் பகையை சம்பாதித்துவிட்டார்.

மலாய்க்கா அர்பாஸுடன் இருந்தபோதே அர்ஜுனுடன் தொடர்பில் இருந்ததாக பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.