ஒடிசாவில் சுவாரசியம் – பன்னிரெண்டாம் வகுப்பை ஒன்றாக முடித்த அப்பா, மகனுக்கு பாராட்டு

0
480

ஒடிசா மாநிலத்தில் 58 வயதான தந்தையும், 29 வயதான மகனும் ஒரே சமயத்தில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

புவனேஷ்வர்: ஒடிசாவை சேர்ந்தவர் அருண் குமார் பேஜ் (58). இவரது மகன் பிஸ்வஜித் பேஜ் (29). அருண்குமாருக்கு 12 வயதாகும் போது அவரது அப்பா இறந்து விட்டார். இதனால் அவரால்  மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது.
இதேபோல், அவரது மகன் பிஸ்வஜித் கடந்த 2004-ல் 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயிலானதால் மேற்கொண்டு படிக்கவில்லை.
201805090458090688_1_symbol-2._L_styvpf

இந்நிலையில், அருண்குமாரும், விஸ்வஜித்தும் 12-ம் வகுப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொண்டனர்.

இதற்காக இருவரும் தனியாக விண்ணப்பம் செய்தனர். ஆனால், என்ன ஆச்சரியம், தந்தைக்கும், மகனுக்கும் ஒரே இடத்தில் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது. இருவரும் நன்கு படித்து தேர்வெழுதினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஆச்சரியம் என்னவெனில், தந்தை, மகன் இருவரும் 500க்கு 342 மதிப்பெண் எடுத்து தேர்வாகினர்.

இதுகுறித்து அருண்குமார் கூறுகையில். இந்த வாய்ப்பை எனக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு படித்தேன். எங்கள் இருவருக்கும் ஒரே செண்டர் எனினும் அறைகள் வெவ்வேறு. இருவரும் ஒரே மாதிரி மார்க் எடுத்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

விடாமுயற்சியால் தந்தையும் மகனும் ஒன்றாக சேர்ந்து 12-ம் வகுப்பு தேர்வானதற்கு அப்பகுதி மக்கள் தங்களின் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.