யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதான மாணவி மீட்பு!

0
284

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,குறித்த மாணவி நேற்று காலை இசை நிகழ்வு ஒன்றிற்கு செல்வதற்கு குடும்பத்தினரை கேட்டுள்ளார்.

அவர்கள் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தமையால் குறித்த மாணவி மா மரத்தில் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார் என இளவாளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் தாயார் மாணவியை காணவில்லை என அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் உதவியோடு மாணவியின் சடலம் மரத்தில் தொங்கியதை அவதானித்தனர்.

பின்னர் இளவாளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்தவுடன் சடலம் இறக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 13 வயதான மாணவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.