கடையில் இருந்து வௌியே வந்த சிறுவனுக்கு காத்திருந்த பேராபத்து (அதிர்ச்சிக் காணொளி)

0
461

புத்தளம் – கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இன்று மாலை வேன் வாகனமொன்றில் மோதி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் – நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்று மீண்டும் வௌியே வந்துள்ள போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வேன் வாகனத்தின் சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் , பின்னர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் புத்தளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.