96 வயதில் பட்டம் பெற்ற ஸ்பெயின் ராணுவ வீரர்

0
685

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இராணுவ வீரர் 96 வயதில் பட்டம் பெற்று தனது ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் பாப் பார்கர். 96 வயதான இவர் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தபோது இரண்டாம் உலகப்போர் தீவிரமாக இருந்தது. எனவே, இவர் போருக்கு அனுப்பப்பட்டார்.

போர் முடிந்த பிறகு அவரால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. டொலீடோ நகருக்கு திரும்பிய அவர் பணியில் தீவிரமாக இருந்தார். அதனால் அவரால் பட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை.

இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் இருந்த அவர் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என விரும்பினார். டொலீடோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பட்டப்படிப்பை முடித்தார்.

அதைதொடர்ந்து 68 ஆண்டுகளுக்கு பிறகு தனது 96 வயதில் அவர் பட்டம் பெற்றார். அவரை குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்த்தினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.