பாடலுடன் வண்ணமயமாக துவங்கிய விஸ்வாசம் படப்பிடிப்பு – நயன்தாரா பங்கேற்பு

0
665

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு திருவிழா செட்டில் பாடலுடன் வண்ணமயமாக துவங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவும் பங்கேற்கிறார்.

பட அதிபர்கள் போராட்டம் முடிந்து விஸ்வாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இன்று துவங்கியது.

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து படத்தின் நாயகி நயன்தாரா இன்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

201805072149181674_Nayanthara-Flies-to-Hydrabad-for-Viswasam_SECVPF.gifதொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் மூன்று நாட்கள் பாடல் காட்சியையும், பின்னர் ஆக்‌ஷன் மற்றும் கிராம சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் முதல் நாளான இன்று திருவிழா போன்ற வண்ணமயமான செட்டில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கக்கட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்யோஜாதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்ததை பாருங்க!!(வீடியோ)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.