முதன் முறையாக திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள்!- (வீடியோ)

0
2046

பிரித்தானியாவில் முதன்முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியான மணமகன்களான ஜாஹெத் சௌதிரி (வயது 24) மற்றும் சீன் ரோகன் (வயது 19) பாரம்பரிய உடையில் Walsall Registry Office-ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இரண்டு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் திருணம் செய்து கொண்டது குறித்து ஜாஹெத் சௌதிரி கூறியதாவது, நான் அழுது கொண்டிருந்த போது முதன் முறையாக என்னை சந்தித்த ரோகன் நலம் விசாரித்தார்.

maxresdefaultஅப்போது ரோகன் கொடுத்த நம்பிக்கையிலேயே தற்போது வரை நான் இருக்கிறேன். முஸ்லிம் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

அதிலிருந்து வெளிவர மருந்து எடுத்துக்கொண்டேன். சவுதி அரேபியா மற்றும் வங்கதேசத்திற்கு புனித யாத்திரையும் மேற்கொண்டேன் என கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் முஸ்லிமாகவும், ஓரினச் சேர்க்கையாளராகவும் இருந்து இந்த உலகத்திற்கு வாழ்ந்து காட்டுவோம் என கூறியுள்ளார்.

எனினும் இந்த திருமண நிகழ்வில் ஜாஹெத் சௌதிரியின் பெற்றோர்கள் பங்கேற்கவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.