திருமணத்தை உடனே நிறுத்துங்கள் – இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர் கடிதம்

0
848

லண்டன்:பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மேகன் மார்க்லேயின் சகோதரர்  தாமஸ் பென்ஸ் இளவரசர் ஹாரிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மெர்க்கல் பற்றி எழுதியுள்ள விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

201805031724116112_1_1525292644555._L_styvpf
அதில், நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மார்க்கலே வாழ்க்கையில் ஆழமில்லாத பெண் ஆவாள்.

மேலும் அதிகமாக கற்பனையில் வாழ்பவள். அவளைப்பற்றி உலகமே அறிந்து கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் மெர்க்கலின் சுயரூபதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்.

அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம், இங்கிலாந்து ராயல் திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறு ஆகும் என எழுதியுள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆனவரான மெர்க்கல் இளவரசர் ஹாரியை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியான நாளில் இருந்து, மெர்க்கலின் குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிகமாக, மெர்க்கல் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கடிதம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.