ரூ.330 கோடி (50 Million Dollars) வரதட்சணை கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த 68 வயது சவூதி இளவரசர் – (வீடியோ)

0
2082

சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் மகள் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக பெண்ணுக்கு அவர் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண நிகழ்வின் போது அதை சுற்றியுள்ள இடத்தில் 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த வெள்ளை நிற சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது.

இதோடு வைரங்களும் பெண்ணுக்கு தரப்பட்டது.

மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

31562070_10212002322117909_8060619373582221312_n31496869_10212002321757900_2734407606356410368_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.