இனிமேல் குடிக்காதீங்க அப்பா.. ஆவியாக வருவேன்: தூக்கில் தொங்கிய மாணவனின் உருக்கமான கடிதம்

0
1028

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த தினேஷ் என்பவர் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவராவார்.

தினேஷின் தந்தை, கடந்த சில ஆண்டுகளாக மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் தினேஷ் குடும்பம் வறுமையில் வாடியதோடு அவரும் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90-7இந்நிலையில் தினேஷ் இன்று திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தந்தையின் மதுபழக்கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்கிறேன், தயவு செய்து டாஸ்மாக்கை மூடுங்கள் என கோரியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90-8

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.