செம்ம வெயிட்டு!’ – காலா படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட தனுஷ்!!- (வீடியோ)

0
273

ரஜினி நடித்துள்ள காலா படத்தில் இடம்பெற்றுள்ள ‘செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக்கை தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் பெயர் ‘காலா’ என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், ”காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார்.

காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனெவே அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், தமிழ் திரையுலகினரின் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில், ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள ‘செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.

அதன்படி, காலா படத்தின் செம்ம வெயிட்டு சிங்கிள் டிராக்கை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.