பெண் மருத்துவரை ஆசைக்கு அழைக்கும் பெரும்புள்ளி நிர்மலாதேவியை தொடர்ந்து லீக்கான அடுத்த ஆடியோ

0
1369

நிர்மலாதேவி ஆடியோ வெளியாகி பரபரப்பு முடிவதற்குள் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கால்நடைதுறை இயக்குனர் பத்மநாபன் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பெண் மருத்துவரிடம் தனக்காக ரூம் போடச் சொல்லும் ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

இது ஆஃபிஸ் நம்பர் சீக்ரட்டான நம்பர்ல நான் உனக்கு பன்னுவேன்ல அதுல நைட்டு நான் பேசுறேன் உங்கிட்ட பேசனும் நீ வா என அழைக்கின்றார் பத்மநாபன்.

நீ வரலன்னா நானே வர்றேன் எனக்காக ஒரு ரூம் போடு எனக் கூறுகின்றார் பத்மநாபன். உனக்காக எவ்ளோ செய்திருக்கேன் என பெண்ணிடம் வழிகின்றார் கால்நடைதுறை இயக்குனர்.

நான் ரொம்ப கஷ்ட்டப்பட்றேன் (இது பணக்கஷ்டம் இல்லை) என்னைய கண்டுக்கவே மாட்டேங்குற உன் கலர பாத்து எல்லாரும் உங்கிட்ட வழியிறாங்க எனக்காக ரூம் போடு நான் டயத்த சொல்றேன் என்கின்றார் அந்த இயக்குனர்.

உயர் அதிகாரி தனக்கு கீழ் இருக்கும் பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்திருக்கும் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு இயந்திரத்தில் நடக்கும் அசிங்கங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

பணிக்கும் செல்லும் பெண்களின் வாழ்கையை உயர் பதவியில் உள்ள பெரும்புள்ளிகள் சீரழிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முன்பெல்லாம் அரசு இயந்திரங்களில் பணம் லஞ்சமாக புலங்கப்பட்டது. ஆனால் தற்போது அது மாறி பெண்ணை லஞ்ச பொறுளாக்கி வருகின்றனர் பெரும்புள்ளிகள்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.