உலகில் என்றென்றும் ஒளிவீசும் மெய்ஞான ஜோதி புத்தபெருமான்

0
339

சித்தார்த்த குமாரன் நேபாளத்தில் உள்ள லும்பினியில் கி. மு. 563 ஆம் ஆண்டில் பிறந்தார்.

அவரின் தந்தையார் நேபாள நாட்டை ஆண்டு வந்த சுத்தோதன மன்னர் ஆவார். மஹாமாயா அரசி சித்தார்த்த குமாரனின் தாயார் ஆவார்.

அவதரித்த உடனேயே பூமியில் தோன்றிய ஏழு தாமரைப் பூக்களை கடந்து சித்தார்த்த குமாரன் சென்றார். குமாரன் பிறந்த 7ம் நாளில் மஹாமாயா அரசி காலமானார்.

சித்தார்த்தன் அரச குமாரராக வசதிகளுடன் வாழ்ந்தார். அதனால் சமூக வாழ்க்கை பற்றியும் சுற்றாடல் பற்றியும் சித்தார்த்த குமாரருக்கு எதுவும் அப்போது தெரியவில்லை.

16ம் ஆண்டில் யசோதரா அரச குமாரியை சித்தார்த்த குமாரன் மணந்தார். அவர்களுடைய இல்வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாகச் சென்றது. இராகுல என்னும் மழலை பிறந்தது.

சித்தார்த்த இளவரசன் ஒருநாள் நகரத்தைப் பார்ப்பதற்காக தனது உறவினர்களோடு புறப்பட்டார்.

போகும் வழியில் ஒரு தள்ளாத முதியவரைக் கண்டார். அவர் யார் என்று உறவினர்களிடம் கேட்டார்.

“அவர் மிகுந்த வயோதிப மனிதர். நாம் எல்லோரும் இவ்விதமான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடும். இதை தவிர்க்க யாராலும் முடியாது” என்றார்கள் அவர்கள். இளவரசருடைய மனம் நெகிழ்ந்தது. “திரும்புவோம்” என்று கூறினார்.

இரண்டாவது முறை நோயாளி ஒருரையும் மூன்றாவது முறை ஒரு பிணத்தையும் அவர்கள் கண்டனர். இவற்றைக் கண்டவுடன் இளவரசருடைய மனம் மிகுந்த கவலை அடைந்தது.

இந்த உலகம் வாழ்வு நிச்சயம் இல்லை. போலியானது என நினைத்தார். அவர்கள் அரண்மனைக்குத் திரும்பினர்.

நான்காம் நாளிலே வீதியில் ஒரு முனிவரைக் கண்டனர். இவர் யார் என்று உறவினரிடம் வினவினார்.

“அவர் ஒரு துறவி. அவருடைய நோக்கம் முன்பு கண்ட துன்பங்களை நீங்கி முக்தி அடைவதுதான்” என்றார்கள் அவர்கள்.

நானும் இல்லறம் விட்டு நல்லறம் எடுத்து முத்தி அடையவேண்டும் என்று சித்தார்த்த இளவரசன் தீர்மானித்தார்.

நடுநிசியில் மனைவியையும் புதல்வனையும் விட்டு பிரிந்து இல்வாழ்க்கையைத் துறந்து மஹாயாத்திரை செய்தார். அழகிய கேசத்தை சேதனஞ் செய்து காவி உடை அணிந்து துறவறம் அடைந்தார்.

பின்னர் தியானம் அனுஷ்டித்தார். அரச மரத்தடியில் அமர்ந்து மே மாதம் பூரணை நாளன்று விடியற் காலையில் சித்தார்த்த மஹான் அதி சிறந்த புத்தத்துவம் (மெய்ஞானம்) அடைந்தார். நிகரற்ற உலக ஜோதி புத்த பெருமான் அவரது எண்பதாம் வயதில் மே மாதத்தில் பரிநிர்வாணம் அடைந்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.