பீகாரில் பயங்கரம்: சிறுமியை கும்பலாக இளைஞர்கள் பாலியல் சித்தரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!

0
1987

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையானது தினசரி அதிகரிகத்த வண்ணமே உள்ளது.

12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் என மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

அதன்பின்னரும் சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி நெஞ்சை உலக்க செய்கிறது. இப்போது பட்ட பகலில் சிறுமியை, இளைஞர்கள், சிறார்கள் கொடூரமான முறையில் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியிடம் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவறான முறையில் நடந்துக்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அதனை படம் பிடிக்கிறார்கள்.

சிறுமி அண்ணா, அண்ணா விட்டுவிடுங்கள் என கதறி அழும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ஆனால் சிறிது இறக்கமில்லாமல் இளைஞர்கள் சிறுமியிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்துக்கொள்கிறார்கள்.

மரண தண்டனையானது சட்டத்தில் இருந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை, நீதித்துறையில் செயலாக்க வேண்டும் என்ற கோபத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. சிறார்கள் சிரித்துக்கொண்டு கொடூரமான முறையில் நடப்பது பார்ப்பவர்கள் நெஞ்சை உடைய செய்யும் வகையில் உள்ளது.

பீகாரின் ஜகானாபாத்தில் இச்சம்பவம் நேற்று நடந்து உள்ளது. வீடியோவில் பைக் ஒன்று கீழே விழுந்து கிடக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. சிறுமியுடன் வந்தவரது பைக் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.