விராட் கோலி மனைவி அனுஷ்காவை அலற வைத்த ரசிகர்கள்

0
272

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டத்தை பார்க்க வந்த விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி அனுஷ்கா சர்மாவை காதலித்த காலத்திலேயே, அவர் கிரிக்கெட் பார்க்க வந்தால் கோலி விளையாடும் அணி தோற்று விடும். போட்டி நடக்கும் இடத்துக்கு அவர் வரக்கூடாது என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

விராட்கோலி, அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகு ரசிகர்கள் பழையதை மறந்து விட்டனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியை காண அனுஷ்கா சர்மாவும் வந்து இருந்தார்.

ஆரம்பத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அப்போது பந்துகள் சிக்சர்களும், பவுண்டரியுமாக பறந்தது இதை கண்டு அனுஷ்காசர்மா ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்.

பின்னர் ஆடிய டோனி தலைமையிலான சென்னை அணி, ரன்களை குவித்து முன்னேறியது.
201804281452098703_1_calv91he._L_styvpfடோனி அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் அனுஷ்கா சர்மா சோகமானார். இந்த நிலையில், பெங்களூர் ரசிகர்கள் அனுஷ்கா சர்மா வந்தாலே இப்படித்தான் ஆகும் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். அவரை அலறவைத்த ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டு மேலும் வருத்தம் அடைய வைத்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.