முல்லைத்தீவில் வியப்பை ஏற்படுத்திய பெண்கள்!

0
693

முல்லைத்தீவில் நிகழ்வு ஒன்றுக்காக வருகைத்தந்திருந்த அதிதிகளுக்கு வழமையை விட சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட அணியின் 1ஆம் ஆண்டு நிறைவு விழா, புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

14560-2-c9ce1edeb1e4379a01c75dfad5336213இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா, சிவமோகன், சத்தியலிங்கம் உட்பட பல அதிதிகள் வருகைத்தந்திருந்தனர்.

14560-3-c9ce1edeb1e4379a01c75dfad5336213இதன்போது புதுகுடிருப்பில் மகளிர் அணியினர் மேள வாத்தியங்களை இசைத்து அவர்களை வரவேற்றுள்ளார்கள்.

வழமையாக ஆண்களே அனைத்து நிகழ்வுகளிலும் நாதஸ்வரம், மேளம் இசைப்பார்கள். ஆனால் இங்கு பெண்கள் மேளம் மற்றும் நாதஸ்வரம் இசைத்து அதிதிகளை வரவேற்றுள்ளனர்.

14560-4-c9ce1edeb1e4379a01c75dfad5336213இவ்வாறு பெண்கள் தவில், நாதஸ்வரம், மேள வாத்தியங்கள் இசைத்த காட்சியை கண்டுகளிப்பதற்கு அந்தப் பகுதியில் இருந்து ஆயிரக்காணக்கான பொது மக்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.