சரிந்து விழுந்த காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர்!

0
379

யாழ்ப்பாணம் – காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கருங்காலி முருகன் கோவிலின் வருடார்ந்த மஹோற்சவ திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் இன்றைய தினம் தேர் உற்சவம் காலை ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

31444560_1799905336735074_6475582912375949727_n (1)இந்நிலையில் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்று இறுதியில் தேர் இருப்பிடத்தை நோக்கி நுழையும் போது சரிந்து விழுந்துள்ளது.

மேலும் தேர் சரிந்து விழுந்ததில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.