நானும் படுக்கைக்கு அழைக்கப்பட்டேன் – விக்ரம் பட நாயகி புகார்

0
219

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது, எனக்கும் அது நடந்தது என்று நடிகை அனிதா கூறியிருக்கிறார்.

பாரதிராஜாவின் ‘வரு‌ஷமெல்லாம் வசந்தம்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் அனிதா. விக்மின் ‘சாமுராய்’ படத்திலும் நடித்தார். தற்போது இவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

201804281708399161_Vikrams-Pair-actress-Anitha-opens-about-casting-couch_SECVPF.gif“சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. நல்ல தொடக்கம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். என்றாலும், போராடதான் செய்தேன்.

எனக்கும் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த வி‌ஷயத்தில் இருந்து வெளியே வரவேண்டும். என்ன செய்வது? இந்த துறை அப்படி இருக்கிறது.

எங்கள் காலத்தில் எல்லாம் ரெம்ப மோசம். ஆனால், தற்போது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.

நடிகை ரிச்சா சட்டா, “ஒண்ணுமே இல்லாத வி‌ஷயத்தை மக்கள் ஊதி பெரிதாக்குகிறார்கள்.

படுக்கைக்கு அழைப்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என்று நடன இயக்குனர் சரோஜ்கான் கூற நினைத்திருக்கிறார். இதற்காக அவரை குறை சொல்லக்கூடாது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.