வயதானவர் தோற்றத்தில் பந்துவீச்சு!’ – சிறுவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரட் லீ- (வீடியோ)

0
364

கிரிக்கெட்டின் அதிவேக பந்து வீச்சாளர் என்று கருதப்பட்ட பிரெட் லீ தாத்தா வேடமணிந்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து அணிகளும் 7 போட்டிகளை தொட்டுவிட்டதால், ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ டிவி வர்ணனையாளராக உள்ளார்.

bret_16129ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிப்பரப்பும் இந்த தொடரின் முக்கிய வர்ணனையாளர்களில் பிரெட் லீ ஒருவர்.

பிரெட் கிரிக்கெட் ஆட்டத்துடன் நடிப்பதிலும் வல்லவர். அவரை வைத்து சிறுவர்களை குஷிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை வழங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முடிவு செய்தது.

அதன்படி அவருக்கு கிழவன் வேடமணிந்து மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றில் சிறுவர்களுக்கிடையே நிறுத்தியது.

ஆனால், சிறுவர்களுக்கு அது பிரெட் லீ எனத் தெரியவில்லை. முதலில் சிறுவன் வீசிய பந்துகளை அடிக்க தெரியாததுபோல் நடித்தார்.

அதன்பின் அவர்கள் அடிக்கும்படியாக பந்து வீசினார். இதனால் இந்த கிழவர் நமது ஆட்டத்தை வீணடிக்கிறாரே என்று சிறுவர்கள் சலித்துக் கொண்டனர்.

பின்னர் சிறுவர்கள் வீசிய பந்துகளை பிரெட் லீ பறக்கவிட்டார். அத்துடன் வேகமாக பந்து வீசி சிறுவர்களை க்ளீன் போல்டாக்கினார்.

இதனால் சிறுவர்கள் ஆச்சர்யப்பட்டு நீங்கள் கிழவனாக இருக்க முடியாது. நீங்கள் யார் என்று கேள்வி கேட்டனர். அப்போதுதான் பிரெட் லீ  தனது வேடத்தை கலைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.