2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை

0
280

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

1992 உலகக் கோப்பை போட்டி போல இதிலும் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் குறைந்தபட்சம் ஒருமுறையாவது மோதவேண்டும். இதனால் இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் 9 லீக் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று ஜூலை 14-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள போட்டிகளின் அட்டவணை:

 

ஜூன் 5-ஆம் தேதி, புதன்கிழமை – தென் ஆப்பிரிக்கா – சௌத்தாம்ப்டன் மைதானம்

ஜூன் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை – ஆஸ்திரேலியா –  தி ஓவல் மைதானம்

ஜுன் 13-ஆம் தேதி, வியாழக்கிழமை – நியூஸிலாந்து – நாட்டிங்காம் மைதானம்

ஜுன் 16-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை – பாகிஸ்தான் – மான்சஸ்டர் மைதானம்

ஜுன் 22-ஆம் தேதி, சனிக்கிழமை – ஆஃப்கானிஸ்தான் – சௌத்தாம்ப்டன் மைதானம்

ஜுன் 27-ஆம் தேதி, வியாழக்கிழமை – மேற்கிந்திய தீவுகள் – மான்சஸ்டர் மைதானம்

ஜுன் 30-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை – இங்கிலாந்து – பர்மிங்கம் மைதானம்

ஜுலை 2-ஆம் தேதி, செவ்வாய்கிழமை – வங்கதேசம் – பர்மிங்கம் மைதானம்

ஜுலை 6-ஆம் தேதி, சனிக்கிழமை – இலங்கை – லீட்ஸ் மைதானம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.