பாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
442

ஜோத்பூர்: குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஆசாராமுடன் இருந்த கூட்டாளிகளுக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர், கடந்த 2013-ம் ஆண்டு, ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த சாமியார், பின்னர்  2014-ம் ஆண்டு, குஜராத்தில் 2 சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் சிக்கினார்.

இந்த வழக்கில், சாமியாரின் மகனும் உடன்பட்டிருந்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் முஷார்பர் நகரில், தனக்கு எதிராக சாட்சியம் அளித்த சமையல்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கும் ஆசாராம் பாபு மீது தொடரப்பட்டது.

இப்படி தொடர்ந்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. எஸ்.சி / எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம், இவரின் வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று இவர் மீதான வழக்கின் முழு விசாரணையும் முடிவடைந்து, அதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில் சாமியார் ஆசாராம் பாபு உட்பட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆசாராம் பாபுவின் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் பிற்பகலில் ஆசாராம் பாபு உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி வெளியிட்டார்.

அதில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 2 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.