பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

0
362

 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அரசர்கேணி பகுதியில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகப்படும் நிலக் கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஒருவரின் காணியில் காணி உரிமையாளரினால் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்ச் சென்ற இராணுவத்தினர் நிலக் கீழ் பதுங்கு குழி விடுதலைப்புலிகளினுடையது எனத் தெரிவித்ததோடு அதனை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டனர்.

குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி ஆழமானதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

lrre-banfer-8lrre-banfer-10lrre-banfer-7nitghdiiia

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.