மகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர் (படங்கள்)

0
873

மும்பை: நடிகரும், சூப்பர் மாடலுமான மிலிந்த் சோமன் தனது காதலி அங்கிதாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.

1-1524393303நடிகரும், சூப்பர் மாடலுமான மிலிந்த் சோமன்(52) விமான பணிப்பெண்ணான அஸ்ஸாமை சேர்ந்த அங்கிதா கொன்வரை(26) பார்த்ததும் காதல் வயப்பட்டார்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர்.

2-1524393310மிலிந்த் சோமன், அங்கிதாவின் திருமணம் மும்பை அலிபாக் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

முன்னதாக மெஹந்தி, ஹல்தி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

3-1524393318இதையடுத்து அஸ்ஸாமில் பார்ட்டி கொடுக்க முடிவு செய்துள்ளார் மிலிந்த். மராத்தி மற்றும் அஸ்ஸாமி முறைப்படி திருமண சடங்குகள் நடந்தது.

மிலிந்த் சோமனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக அவர் பிரான்ஸை சேர்ந்த நடிகை மைலீனை 2006ம் ஆண்டு திருமணம் செய்து 2009ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

4-1524393326மகள் வயது பெண்ணை மிலிந்த் திருமணம் செய்துள்ளார் என்று மக்கள் பேசுவதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு பிடிக்கும் விஷயத்தை நான் செய்கிறேன் என்கிறார் மிலிந்த் சோமன்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.