இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

0
807

 ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 20 – ஏப்ரல் 26) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடையுங்கள்.

மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய கடன்கள் வாங்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் விரோதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த செயலிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் அவசியம்.   உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களும் உதவுவார்கள். எடுத்த காரியங்களை குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். வியாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். புதிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.  ஆனால் கோதுமையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குறைவான பலன்களே கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ற பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினரின்  திறமைகள் அரங்கேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவ
மணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 20, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். எடுத்த காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நல்லோரின் தொடர்பு ஏற்படும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் அடங்கி விடுவார்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்
நடைகளால் நன்மைகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய வடிவத்தில் மக்களிடம் படைப்புகளைக்கொண்டு சென்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது கலந்து வரும். கணவரிடம் ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவும். மாணவ மணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 21, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். திட்டமிட்ட வேலைகளை சிறப்பாகச் செய்து வெற்றிகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிரிகளும் இப்போது நேசக்கரம் நீட்டுவார்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். தொழிலில் நல்ல மேன்மைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தகர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். வர்த்தகர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த கடன்களும் தீரும்.

அரசியல்வாதிகள் நினைத்த காரியங்களை யுக்தியுடன் செய்து முடிப்பீர்கள். இதனால் கட்சி மேலிடம் பாராட்டும்.  கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். உங்களின் படைப்புகள் சரியான முறையில் மக்களைச் சென்றடையும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் எதையும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். மாணவமணிகள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:  அம்பாளை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 20,22.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் பேச்சு மற்றும் செயல்களில் ஒரு மிடுக்கு தெரியும். திட்டமிட்ட காரியங்களை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். உங்களிடம் மேலதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளைத் தேடி பல வகையிலும் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப் படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளால் நல்ல லாபமும் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். எதிர்கட்சியினரிடம் எதற்கும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினர் புதிய சாதனைகளைச் செய்து பெயரும் புகழும் அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்மணிகளுக்கு பொருளாதார நிலைமை சீராக இருக்கும். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் நீண்டகாலத் திட்டங்கள் தீட்ட இது உகந்த வாரம்.

பரிகாரம்: “ஸ்ரீராம் ஜெய்ராம்’ என்று ஜெபித்தபடி ஆஞ்நேயரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 21, 23.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் உங்களின் பெயரும் புகழும் உயரும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெ றுவீர்கள். பிறருக்கு கடன் கொடுப்பதோ வாக்கு கொடுப்பதோ தேவையில்லாத பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் அவற்றை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சரியாகப் புரிந்து கொண்டு செய்து முடிக்கவும். எடுத்த காரியங்கள் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். அதேநேரம் நண்பர்களைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்திலும்  வெற்றி பெறுவீர்கள். கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் புகழும் பாராட்டும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் குறையும் என்பதால் படிப்பில் நல்ல கவனம் செலுத்திப் படிக்கவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 23, 24.

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். செய்தொழிலில்  முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் போட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே முடியும். பணவசதி சரளமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருப்பதால் கொள்முதல் லாபம் உயரும்.  பால் வியாபாரமும் உங்களுக்கு பலன் கொடுக்கும்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றும். கட்சித் தலைமையிடம் மோதல் போக்கை தவிர்க்கவும்.  கலைத்துறையினருக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். தற்போது புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். வெளிவிளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்:  திங்களன்று அம்பாளை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 24, 25.

சந்திராஷ்டமம்: இல்லை.

 முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். திட்டமிட்ட செயல்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். பயணங்களால் பலன்கள் உண்டாகும். மற்றபடி சேமிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளைக் கொடுக்காமல் நீங்களாகவே செய்வது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். எதிரிகளிடம் கவனத்துடன் பழகவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களின் நலனில் அக்கறை காட்டவும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். உடல் நலம் மனவளத்தை மேம்படுத்த யோகா, பிராணாயாமம் செய்வது நல்லது.

பரிகாரம்: திங்களன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 25.

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொறுமையுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தொழிலில் உங்களின் எதிர்பார்ப்புகள் கைகூடும். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயிகள் போட்டிகளை நேரடியாகச் சந்திக்க நேரிடும். தானியப் பொருள்கள் உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளை கட்சி மேலிடத்தால் பாராட்டுவார்கள். சந்தோஷம் தரும் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். உங்கள் வேலையில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் பொறுமையுடனும் சுறுசுறுப்புடனும் கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்:  துர்க்கையை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 23, 26.

சந்திராஷ்டமம்: 20,21,22.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பிறரின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மேலும் முன்னேற புதிய பயிற்சிகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் செய்தொழிலில் மிகுந்த முன்னேற்றம் காண்பீர்கள். போட்டியாளர்களின் சதியை சமாளிக்கும் சாதுர்யத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆனாலும் தகுந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்க வேண்டி வரும்.

அரசியல்வாதிகள் மீது எதிர்க்கட்சியினர் வீண் அவதூறுகளை சுமத்த எண்ணுவார்கள். எனவே எதிரிகளின் நடவடிக்கைகளில் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். உங்களின் அவநம்பிக்கைகள் நீங்கும்.

பெண்மணிகளின் செல்வாக்கு உயரும். மாணவமணிகள் வீண் பிரச்ளைகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். எனவே எதிலும் கவனமாக இருக்கவும். நண்பர்களிடமும் கவனமாகப் பழகவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 23, 26.

சந்திராஷ்டமம்: 23,24.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வரவு நன்றாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உங்களின் திறமையான அணுமுறையாலும் தியானத்தாலும் மனச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். ஆனாலும் வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு தொய்வு ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள். உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி நன்றாக இருப்பதால் விளைச்சலும் அமோகமாகவே காணப்படும். கொள்முதலிலும் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை நாடிச்செல்வார்கள். எதிர்க்கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். பெண்மணிகளுக்கு காரணமில்லாமலேயே மனதில் அமைதி குறையும். கணவரை ஒற்றுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.  மாணவமணிகளுக்கு வெளிவிளையாட்டுகளின்போது காயம் ஏற்படலாம். எனவே  எச்சரிக்கை தேவை.

பரிகாரம்:  அனுமனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 20, 23.

சந்திராஷ்டமம்: 25,26.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பண வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மதிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் செய்தி நற்செய்தியாகவே அமையும். மற்றபடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடன்கள் குறையும். அதுமட்டுமில்லாமல் புதிய முதலீகளிலும் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகள் பெற முயற்சி செய்ய வேண்டாம். சில இடையூறுகள் ஏற்பட்டாலும் அவைகள் தானாகவே விலகும்.

அரசியல்வாதிகளுக்கு  உட்கட்சிப் பூசலை சமாளிக்க வேண்டி வரும். தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகள் கடும் முயற்சிகள் செய்து கல்வியில் முன்னேறும் நிலையை அடைவார்கள்.

பரிகாரம்:  புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 25, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார நிலை சீராக இருக்கும். ஸ்பெகுலேஷன் வகையில் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறைவதால் எழுச்சியுடன் காணப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வார இறுதியில் நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் பெருக உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி மகசூல் அதிகரிக்கும். புதிய பயிர் விளைச்சலுக்கு கவனம் செலுத்தினாலும் தற்போது நிதானத்துடன் ஈடுபடவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு குறையும். கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்.  கலைத்துறையினர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள்.ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு சக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்:  செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.