ராகு சரியில்லாத ஜாதகம் – உண்டாகும் பிரச்சனைகள்

0
261

நீண்டநாள் திருமணத்தடை, புத்திரதடை, கடன் தொல்லை, தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.

சந்திர சூரியர்களையே பலமிழக் கும் படி செய்யவும் ஒளி குன்றும் படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ள ராகு கிரகத்திற்கு மிகப்பெரிய பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ஆகும்.

ராசியில் ராகு கேதுவிற்கு சூரிய சந்திரர்கள் நின்ற ராசியும் ராசி அதிபதியும் பகைவர்கள். ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சோர்க்கை பெற்ற ஜாதகருக்கு இன்னல்களைத் தருகிறார்கள்.

மேலும் 2, 7, 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும்.

மேலும் ஜாதகத்தில் 5ம் இடத்தல் இருந்தால் புத்திரதோஷமும் 8ம்; இடத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்ப்ப தோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும், தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது கனவில் நேரில் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது.

செய்வினைக்கோளாறு உண்டாவது. சாபங்களுக்கு ஆளாவது போன்றவை ஏற்படும். நீண்டநாள் திருமணத்தடை புத்திரதடை தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.