நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் பொருந்திப் போகும் ‘நடிகையர் திலகம்’ டீஸர் வெளியானது!

0
477

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள `நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர் தமிழ் வருடப் பிறப்பன்று (ஏபர்ல் 14) வெளியாகியுள்ளது.

இதன் தெலுங்கு டீஸரான மகாநதியும் நேற்று வெளியாகி நடிகை சாவித்ரியின் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகையர் திலகம் சாவித்ரியின் மேல் ரசிகர்களுக்கு என்றுமே நீங்காத ஒரு பிரியம் உண்டு. தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தனியிடம் பெற்று அன்றைய சூப்பர் ஸ்டார் ஹீரோயினாக திகழ்ந்தவர் சாவித்ரி.

தெலுங்கில் 147 படங்களும், தமிழில் 102 படங்களும் நடித்துள்ளார் சாவித்ரி. சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து பயோபிக் வகையில் இயக்குநர் நாக் அஸ்வின் நான்கு மொழியில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

poster_new

மதுரவாணியாக சமந்தாவும், அலூரி சக்கரபாணியாக பிரகாஷ் ராஜும் நடிக்க, அவ்வப்போது, இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

அதில் பத்திரிகையாளராக மதுரவாணி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா திக்கி திக்கி பேசத் தொடங்கி…அவங்க நடிகையர் திலகம்’ என்று கூறி முடிக்க, கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக தோன்றும் ஓபனிங் சீனுடன் இந்த டீஸர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது.

இந்த டீஸர் வெளியான ஒரே நாளில் தமிழில் மூன்று லட்சம் பார்வையாளர்களையும், தெலுங்கில் 18 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களையும் பெற்று வைரலாகி வருகிறது. படத்தின் எதிர்ப்பார்ப்பை இந்த டீஸர் அதிகரித்துவிட்டது எனலாம்.

கோலிவுட் ஸ்ட்ரைக் காரணமாக தமிழில் இப்படம் வெளியாக தாமதமாகலாம். தெலுங்கில் மே 9-ம் தேதி வெளிவரும் அதே நாளில் ஸ்ட்ரைக் முடிந்துவிட்டால் தமிழிலும் வெளியிட முயற்சி செய்கிறோம் என்கிறார்கள் படக்குழுவினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.