காணி விடுவிப்புக்கு நன்றி தெரிவித்து யாழில் காவடி!

0
166

வலி. வடக்­கில் நேற்று 683 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­மசிங்கவுக் கும் இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­க­வுக்­கும் நன்றி தெரி­வித்து அவர்­க­ளின் படங்­க­ளைத் தாங்­கி­ய­படி அலகு குத்தி காவடி எடுத்­தார் ஒரு­வர்.மயி­லிட்­டி­யைச் சேர்ந்த மு. இன்­ப­ராசா என்­ப­வரே இவ்­வாறு காவடி எடுத்­தார்.

30698615_1728059050566070_8186186242879127552_nமயி­லிட்டி கண்­ணகை அம்­மன் ஆல­யத்­தில் இருந்து அவ­ரது குல­தெய்­வ­மான முலவை காளி கோயி­லுக்கு அவர் காவடி எடுத்­தார்.

30656827_1246241112177733_2005855542341271552_n

ஜனாதிபதி மைத்­திரி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இரா­ணுவ தள­பதி மகேஷ் சேன­நா­யக்க ஆகி­யோ­ரு­டைய படங்­க­ளைக் கழுத்தில் மாட்­டிக்­கொண்டு அலகு குத்தி காவ­டி­யு­டன் அவர் நடந்து சென்­றமை பார்ப்­ப­தற்கு விநோ­த­மான காட்­சி­யாக இருந்­தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.