தேசிய விருது: தமிழ்ப் பாடகிகளின் அங்கீகாரத்தை நிலைநிறுத்தியுள்ள சாஷா திருப்பதி! (விடியோக்கள்

0
318

14-வது தேசிய விருதைப் பெறும் தமிழ்ப் பாடகி என்கிற பெருமையை அடைந்துள்ளார் சாஷா திருப்பதி.

கடந்த வருடம் வெளியான மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்துக்காகப் பாடிய வான் வருவான் பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான விருதைப் பெறவுள்ளார் சாஷா திருப்பதி.

இதற்கு முன்பு 2014-ம் வருடம் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா, சைவம் படப்பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தமிழ்த் திரையுலகில் பாடகர்கள் அதிகமாகக் கொண்டாடப்பட்டாலும் முதல் தேசிய விருதைப் பெற்ற (ஆண்) தமிழ்ப் பாடகர், உன்னி கிருஷ்ணன்.

காதலனின் என்னவளே பாடல். வருடம் – 1994. பிறகு இரு வருடங்கள் கழித்து தங்கத்தாமரை பாடி எஸ்பிபியும், மூன்று வருடங்களில் என்னச் சொல்லப் போகிறாய் பாடி சங்கர் மகாதேவனும் தேசிய விருதைப் பெற்றார்கள்.

மீண்டும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் பாடலுக்காக சுந்தரய்யர் விருதைப் பெற்றார்.

தமிழ்ப் பாடகிகளின் கதையே வேறு. தேசிய விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். 1968-லிருந்து விருது ஆரம்பம். முதல் நான்கு விருதுகளில் மூன்று தமிழுக்குத்தான் கிடைத்தன.

முதலிரண்டு தேசிய விருதுகளே தமிழுக்குதான் (சுசீலா, கே.பி.எஸ்). இப்படி இந்த வருடத்துடன் மொத்தம் 14 முறை தமிழ்ப் பாடகிகளுக்குத் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இதுவரை இளையராஜா இசையமைப்பில் ஒரு (ஆண்) தமிழ்ப் பாடகரும் தேசிய விருது பெற்றதில்லை. ஆனால் ஜானகி (இருமுறை), சித்ரா, பவதாரிணி, சாதனா சர்க்கம் ஆகியோர் ராஜா இசையில் பாடி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார்கள்.

ரஹ்மான் இசையமைப்பில் இந்த வருடத்துடன் மூன்று பேர் தேசிய விருது பெற்றுள்ளார்கள். ஸ்வர்ணலதா (போறாளே பொன்னுத்தாயி), சித்ரா (மானாமதுரை), சாஷா திருப்பதி (வான் வருவான்)

2010-ம் ஆண்டு முதல் திரையுலகில் பாடி வரும் 30 வயது சாஷா, அட்லி இயக்கிய ராஜா ராணி படப்பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ஏய் மிஸ்டர் மைனர் (காவியத் தலைவன்), என் மன்னவா (லிங்கா), காரா ஆட்டக்காரா, பறந்து செல்ல வா, நானே வருகிறேன் ( ஓ காதல் கண்மணி), சிலுக்கு மரமே (பாயும் புலி), ராசாளி (அச்சம் என்பது மடமையடா), வான் வருவான் (காற்று வெளியிடை), எந்திர லோகத்து (2.0) போன்ற புகழ்பெற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகின் பிரபல பாடகியாகியிருக்கும் சாஷா, இந்தத் தேசிய விருதின் மூலம் சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.