எங்க வீட்டு மாப்பிள்ளை: இறுதிச்சுற்றில் பங்குபெறும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார் ஆர்யா!- (வீடியோ)

0
293

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9.30 மணி வரைக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கலந்துகொள்ளும் 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி இயக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

கடைசி 5 பேரில் ஸ்வேதா, அபர்நதி, சீதாலட்சுமி, சுசானா, அகதா ஆகியோர் இடம்பெற்றார்கள். இந்நிலையில் இந்தப் பட்டியலில் இருந்து இருவரை நீக்கி இறுதிச்சுற்றில் மோதும் 3 பேரைத் தேர்வு செய்துள்ளார் ஆர்யா.

சுசானா, அகதா, சீதாலட்சுமி ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் பங்குபெறும் மூன்று போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

கடைசி 5 பேரில் தேர்வான ஸ்வேதா, அபர்நதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் தற்போது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இறுதிச்சுற்றுக்குத் தேர்வானவர்களில் சுசானா, கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப் பெண். அகதா – பெங்களூர், சீதாலட்சுமி – கொச்சி.இந்த மூன்று பேரில் இருந்து தனக்கான ஜோடியை ஆர்யா தேர்வு செய்யவுள்ளார். இறுதிச்சுற்று விரைவில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.