மாநகர முதல்வரை அண்ணன் என அழைத்தவருக்கு விழுந்தது நெருப்படி !!

0
259

மாநகரசபையின் இன்றைய (11) கன்னி அமர்வில் உரையாற்றிய எம்.எம்.சி தர்சானந் யாழ் மாநகர முதல்வரை, ஆர்னோல்ட் “அண்ணன்” என விழித்துப் பேசினார்.

இதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் ஆர்னோட், “அண்ணன் தம்பி பாசத்தை இங்கு சபை அமர்வுகளில் காட்டத் தேவையில்லை என்றும் சபையின் மாண்பினைப் பேணும்வகையில் முதல்வரை கௌரவ முதல்வர் என்றும், சபை உறுப்பினர்களை கௌரவ உறுப்பினர்கள் என்றும் அழைக்குமாறும்” தர்சானந்திற்கு அறிவுரை வழங்கினார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90இந்நிலையில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டிருந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உறுப்பினரான தர்சானந், கலைஞர் கருணாநிதி ஸ்ரைலில் கழுத்தில் கட்டையான அளவுடைய சிவப்பு மஞ்சள் துண்டு ஒன்றினை தொங்க விட்டவாறு சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும், தனது கன்னி உரையின் இறுதியில் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என முடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.