டாலடிக்கும் Cold shoulders.

0
545

அது என்ன கோல்ட் ஷோல்டர்ஸ்? ஸ்லீவ்லெஸ் கிடையாது. ஆனால், ஸ்லீவ்லெஸ் ஸ்டைல்! புரியவில்லை அல்லவா?

விளங்கிக் கொள்ள இந்த வருடத்தின் ‘மிஸ் தமிழ் நாடு’ மற்றும் ‘மிஸ் தமிழ்’ என இரண்டு தேவதைகளை மேக்ஸ் ட்ரெண்ட்ஸில் களம் இறக்கினோம்.

கடகடவென தங்களுக்குப் பிடித்த ஸ்டைலில் கோல்ட் ஷோல்டர்ஸ், ஹாஃப் ஷோல்டர்ஸ், சிங்கிள் ஷோல்டர் உடைகளையும் அதற்கு மேட்ச்சிங்கான ஆக்ஸெசரிஸ்கள், காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு ‘ப்ப்ப்பா…’ என நாம் வியக்க வந்து நின்றார்கள். நமது போட்டோகிராபரின் கைகள் தன்னிச்சையாய் கிளிக் செய்யத் தொடங்கின.

கோல்ட் ஷோல்டர் பற்றி டிஸைன் மேக்ஸ் துணைத் தலைவர் காமாக்‌ஷி கெளலிடம் கேட்டோம்.

‘‘குர்தா, டாப்ஸ், டி ஷர்ட், ப்ளவுஸ், க்ராப் டாப் என எங்கும் எதிலும் இந்த கோல்ட் ஷோல்டர் கான்செப்ட்டை பயன்படுத்தலாம். குறிப்பாக, ¾ பலாஸோவுடன் கோல்ட் ஷோல்டர் க்ராப் டாப் அல்லது ஹாஃப் ஷோல்டர் டாப்தான் இப்போதைய கல்லூரிப் பெண்களின் ஹாட் சாய்ஸ்.

எந்த உடல் வாகுக்கும் ஏற்ற அம்சமான ஸ்டைல் இது. பொதுவாக, திருமணத்துக்குப் பிறகு பெண்களின் கை புஜங்கள் சற்று தளர்வாகி அதன் அடிப்புறம் கொஞ்சம் சதை போடும். இவர்கள் ஸ்லீவ்லெஸ் அணிந்தால் உறுத்தலாகத் தெரியும் என்று அணிய மாட்டார்கள்.

இப்படி சதைப் பிடிப்பான பெண்கள்கூட இந்த கோல்ட் ஷோல்டர் ஸ்டைலைப் பயன்படுத்தலாம்.

மேலும், ஸ்லீவ்லெஸ் டைப் அணிவதாக இருந்தால் அக்குள் பகுதிகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். மாயிஸ்சுரைஸிங் கிரீம்கள் பயன்படுத்த வேண்டும்.

அதுவும் இல்லாமல் ஸ்லீவ்லெஸ் என்றால் அது கிளாமர் லுக் வேறு கொடுக்கும். இதுக்கு எல்லாம் சரியான தீர்வு இந்த கோல்ட் ஷோல்டர்ஸ்தான். ஹாஃப் ஷோல்டர் அணியும்போது மட்டும் நம் தோள்பட்டை பகுதிகளில் ஒரே மாதிரியான ஸ்கின் டோன் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்றபடி எந்த ரூல்ஸும் கிடையாது. மேக்ஸி கவுன், ஷர்ட், கவுன், காக்டெயில் ட்ரெஸ் என எங்கும், எப்படி வேண்டுமானாலும் இந்த கோல்ட் ஷோல்டர்களைப் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் பருமனான பெண்கள் நீண்ட ஸ்ட்ரெயிட் அல்லது ஏ-லைன் கவுன்களுக்கு பதில் அனார்கலி ஸ்டைல் கவுன் போன்று இந்த கோல்ட் ஷோல்டரை பயன்படுத்தலாம்.

maxresdefaultஇதனால், பார்க்க ஒல்லியாகத் தெரிவார்கள். அதேபோல் கோல்ட் ஷோல்டர் உடைகள் அல்லது ஹாஃப் ஷோல்டர்ஸ் பயன்படுத்தும்போது கழுத்தில் ஆக்ஸசரிஸ்கள் சிம்பிளாகக் கழுத்து தெரியும்படி போட்டுக்கொண்டால் மேலும் அழகாகக்காட்டும். தோடு கொஞ்சம் பெரிதாக ஷோல்டரைத் தொட்டுவிடும் அளவுக்குப் போட்டுக்கொள்வதும் நல்ல சாய்ஸ்.

எத்னிக் உடைகள் எனில் உடைகளின் தேவையைப் பொறுத்து ஆக்ஸசரிஸ்களைத் தேர்வு செய்யலாம். ஹாஃப் ஷோல்டர்ஸுக்கு உள்ளாடைகளில் மட்டும் கவனம் தேவை.

சில பெண்கள் சாதாரண உள்ளாடைகளை அப்படியே தெரியும்படி அணிவார்கள். இது கூடாது. முடிந்தால் ஸ்ட்ரேப்லெஸ் அல்லது பாலிதீன், எலாஸ்டிக் வகை உள்ளாடைகள் அணியலாம்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் உள்ளாடைகளைத் தெரியும்படி உடுத்தினால் ‘போல்டு கேர்ள்’ லுக் கொடுக்கும். இப்படியான உடல்வாகுக்கு, இப்படியான சருமத்தினருக்குத்தான் செட் ஆகும் என்பது எல்லாம் கோல்ட் ஷோல்டர் உடைகளுக்குக் கிடையாது என்பதுதான் இதன் ஸ்பெஷல்.

அதனால்தான் இன்றைய இளம்பெண்களின் முதல் சாய்ஸாக இந்த ஸ்டைல் இருக்கிறது!’’ என்று புன்னகைக்கிறார் காமாக்‌ஷி கெளல்.

மாடல்கள்: ஸ்ரீஷா (மிஸ் தமிழ்நாடு 2018), காருண்யா (மிஸ் தமிழ்). உடைகள் & இடம்: Max Fashion store (Forum Vijaya Mall).
மேக்கப் / ஹேர்ஸ்டைல்: ஜெயந்தி குமரேசன் (Special Mention: Shiv). Model Coordinator: ஆதித்யா.

– ஷாலினி நியூட்டன்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.