மாற்றுத்திறனாளியான தமிழ் மாணவியை தேடிச் சென்ற நாமல்!

0
427

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி சித்தி பெற்ற தமிழ் மாணவியான அபிஷாயினியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேரில் சென்று சந்தித்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளியான இவர் நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்திருந்தார்.

“க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி பெறுபேறுகளை பெற்ற அபிஷாயினியை சந்தித்து அவருடன் நேரத்தை செலவிட்டதால் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இவள் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றாள். இவளுடைய எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யயயயயயஅத்துடன் அபிஷாயினியின் கல்வி நடவடிக்கைகளுக்காக கற்றல் உபகரணங்களையும் நாமல் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.