நடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)

0
372

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் நடந்து வரும் மவுனப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்றனர்.

201804081149159831_Nadigar-Sangam-Protest-Rajini-kamal-Participate_SECVPF.gif

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்து கொண்டுள்ளார்.

மேலும், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

201804081149159831_1_rajinikamal-1._L_styvpfபின்னர், தீவிர அரசியலில் களமிறங்கி வரும் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.