முல்லைதீவில் யுவதி ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு !

0
808

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் பகுதியில் இளம் யுவதி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கருவேலன்கண்டல் பகுதியில் நேற்றையதினம் இரவு வேளை வீட்டில் உணவு அருந்திவிட்டு நாய்களை கட்டுவதாக சென்ற யுவதி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரவு வேளை வீட்டில் உணவு அருந்திவிட்டு நாய்களை கட்டுவதாக சென்ற யுவதியை காணாத நிலையில் அருகில் உள்ள இடங்களில் தேடிப்பார்த்த போதிலும் கிடைக்கவில்லை இந்நிலையில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருவேலன் கண்டல் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினம் பிரியங்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவே ஒட்டுசுட்டான் பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஒட்டுசுட்டான் பொலீசார் குறித்த உடலை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.