ஐந்து பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி பலி

0
897

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார்.

குறித்த சம்பவத்தில் ரதீஸ்வரன் (தயா) (49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

Jaffna-Accident-5-Childrens-Father-Died-atRailwayCrossing-3யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (02) இரவு 7.00 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை புகையிரதம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தை கடந்து பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் பாவனைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Jaffna-Accident-5-Childrens-Father-Died-atRailwayCrossing-1சீவல் தொழில் செய்யும் இவர் நெடுங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று திரும்பியவேளை பொன்னம்பலம் ரயில் கடவையால் மோட்டார் வண்டியை உருட்டியவாறு கடக்க முயன்ற வேளை, ரயில் வருவதை அவதானித்து அவசரமாக கடக்க முயன்றுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.